Wednesday 11 April 2012

நறுமுகையே நறுமுகையே - கூறுவது இதையே !!


படம்: இருவர்.
பாடியவர்கள்: உன்னிகிருஷ்ணன், பாம்பே ஜெயஸ்ரீ.
வரிகள்: வைரமுத்து.
இசை: A.R.ரஹ்மான்.



நறுமுகையே நறுமுகையே நீயொரு நாழிகை நில்லாய்
விளக்கம்:
நறுமுகையே என்றால் நறுமணம் மிக்க புதியதாய் பூக்கும் மொட்டு..
நாழிகை என்றால் 24 நிமிடம் கொண்ட ஒரு கால அளவு..
அதாவது மலர் போன்றவளே.. சற்று இங்கே நில் என்று பொருள்..
நம்மூர் பாஷைல:
பூ மாறி சோக்கா இருக்க பொண்ணே.. நீ கொஞ்சம் இங்க நில்லேன்..

செங்கனி ஊறிய வாய் திறந்து நீயொரு திருமொழி சொல்லாய்
விளக்கம்:
தேன் சொட்டும் உன் இதழ்களை திறந்து நீ என்னுடன் பேசு / செங்கனி ஊறி மிகவும் இனிப்பாக இருக்கும் உன் இதழ்களை திறந்து உன் மொழியால் என்னுடன் பேசு..
நம்மூர் பாஷைல:
சிக்குன்னு சும்மா தேன் மாறி ஸ்வீட்டா இருக்க உன் வாய கொஞ்சம் தொறந்து என் கூட பேசு.

அற்றைத் திங்கள் அந்நிலவில் நெற்றித்தரள நீர்வடிய
கொற்றப்பொய்கை ஆடியவள் நீயா
விளக்கம்:
அற்றை என்றால் அன்றொரு நாள். திங்கள் என்றால் முழுமதி. அதாகப்பட்டது அன்று ஒரு நாள் பௌர்ணமியின் போது என்று பொருள்.
தரளம் என்றால் முத்து.. கொற்றப்பொய்கை என்றால் அரண்மனை அந்தபுரத்தில் இருக்கும் குளம்..
அதாவது அன்று ஒரு நாள் முழு நிலவின் போது அந்தபுரத்தில் உள்ள குளத்தில் நெற்றியில் முத்து போல நீர் உருண்டோட நீராடிய பெண்மணி நீயா??
நம்மூர் பாஷைல:
ஒரு நாள் பௌர்ணமி அன்னிக்கி ராஜாலாம் கில்பான்ஸா இருக்க ஒரு இடத்துல.. அங்க இருக்க ஒரு கொளத்துல(குட்டைல) நெத்தில உருண்ட உருண்டையா தண்ணி வழிய குளிச்ச பொண்ணு நீதான??

திருமகனே திருமகனே நீ ஒரு நாழிகைப் பாராய்
வெண்ணிறப் புரவியில் வந்தவனே வேல்விழி மொழிகள் கேளாய்
விளக்கம்:
திருமகன் என்றால் எல்லா நற்பண்புகளும் கொண்ட ஒருவன். திருமகனே என்னை சற்று பார்.
புரவி என்றால் குதிரை. வெள்ளை குதிரையில் வந்தவனே.. வேல் போன்ற என் கண்கள் கூறும் வார்த்தைகளை கேள்..
நம்மூர் பாஷைல:
எல்லா நல்ல பழக்கமும் இருக்கவனே (GENTLEMAN) என்ன கொஞ்சம் பாரு..
வெள்ள கலர் குதுரைல வந்த நல்லவனே.. வேல் மாறி ஷார்ப்பா இருக்க என் கண்ணு என்ன சொல்லுது கேளு..

அற்றைத் திங்கள் அந்நிலவில் கொற்றப்பொய்கை ஆடுகையில்
ஒற்றைப்பார்வை பார்த்தவனும் நீயா
விளக்கம்:
அன்று முழுநிலவில் நான் அந்தபுர குளத்தில் நீராடுகையில் என்னை பார்த்தவன் நீயா..
நம்மூர் பாஷைல:
பௌர்ணமி அன்னிக்கி நான் குளிக்கும் போது என்ன பாத்தவன் நீதானா..

மங்கை மான்விழி அம்புகள் என் மார்துளைத்ததென்ன..
விளக்கம்:
மான்களின் விழிகளை கொண்ட இந்த பெண்ணின் கண்களில் இருந்து வரும் பார்வை, அம்புகளை போல என் மனதை துளைக்கிறது..
நம்மூர் பாஷைல:
மானோட கண்ணு மாறி அழகான கண்ணு இருக்க பொண்ணே.. நீ பாக்குறப்போ உன் லுக்கு (LOOK) சும்மா அம்பு மாறி வந்து என் நெஞ்சில குத்துது..

பாண்டினாடனைக் கண்டு என்உடல் பசலை கொண்டதென்ன..
விளக்கம்:
பசலை என்றால் உடலில் இருக்கும் மயிர்கள் சிலிர்த்து நிக்குதல்..
பாண்டி நாட்டு வீரனே.. உன்னை கண்டதும் என் உடல் முழுவதும் சிலிர்த்துவிட்டது..
நம்மூர் பாஷைல:
பாண்டி நாட்ல இருந்து வந்த மனுஷனே.. உன்ன பாத்த ஒடனே ஒரே வெக்க வெக்கமா வந்து என் ஒடம்புல இருக்க முடி எல்லாம் நட்டுகிச்சி..(EXCITEMENT)

நிலாவிலே பார்த்த வண்ணம் கனாவிலே தோன்றும் இன்னும்
விளக்கம்:
அன்று நான் முழு நிலவின் வெளிச்சத்தில் கண்ட அந்த காட்சி..
இன்றும் என் கனவில் தோன்றிக்கொண்டே இருக்கிறது..
நம்மூர் பாஷைல:
அன்னிக்கி நான் நிலா வெளிச்சத்துல பாத்த அந்த சீன்.. இன்னிக்கும் என் ட்ரீம்ஸ்ல வருது..

இளைத்தேன் துடித்தேன் பொறுக்கவில்லை..
இடையினில் மேகலை இருக்கவில்லை..
விளக்கம்:
மேகலை என்றால் பெண்கள் இடுப்பில் அணியும் ஒரு ஆபரணம் (ஒட்டியாணம்)..
உன்னை காணாத துயரத்தில் துடித்து துடித்து இளைத்து போனேன்.
இளைத்த காரணத்தினால் என் இடுப்பினில் மேகலையும் நிற்கவில்லை..
நம்மூர் பாஷைல:
உன்ன பாக்காம நொந்து நூடுல்ஸ் ஆயிட்டேன்.. ஒடம்பும் இளச்சிடிச்சி..
அதுனால இடுப்புல ஒட்டியாணம் கூட நிக்கல..

யாயும் ஞாயும் யாராகியறோ நெஞ்சு நேர்ந்ததென்ன
விளக்கம்:
யாய் என்றால் என் தாய்.. ஞாய் என்றால் உன் தாய்..
என் தாயும் உன் தாயும் எந்த விதத்திலும் சம்மந்தபடாதவர்கள்..
ஆனாலும் நம் இருவரது இதயமும் ஒன்றாக கலந்தது எப்படி??
நம்மூர் பாஷைல:
உன் மம்மியும் என் மம்மியும் ஜிகிடி தோஸ்து இல்ல..
ஆனாலும் உன் மனசும் என் மனசும் எப்படி SINK ஆச்சு??

யானும் நீயும் எவ்வழியறிதும் உறவு சேர்ந்ததென்ன
விளக்கம்:
நானும் நீயும் எந்த விதத்திலும் தெரிந்தவர்கள் இல்லை..
ஆனாலும் எப்படி நமக்குள் இந்த உறவு ஏற்பட்டது??
நம்மூர் பாஷைல:
மம்மீஸ விடு.. உனக்கும் எனக்குமே எந்த சம்மந்தமும் இல்ல..
அப்புறம் எப்படி நமக்குள்ள இந்த இது வந்துச்சி..

ஒரே ஒரு தீண்டல் செய்தாய் உயிர்க்கொடி பூத்ததென்ன.
விளக்கம்:
ஒரே ஒரு முறை தான் என்னை நீ தொட்டாய்..
அதுவே என்னுள் ஒரு அரும்பு பூத்தது போல ஆகி விட்டதே..
நம்மூர் பாஷைல:
ஒரு தபா தான் என்ன நீ ஒரசுன.. அதுவே எனக்குள்ள என்ன என்னமோ பண்ணிடிச்சே..

செம்புலம் சேர்ந்த நீர்த்துளி போல் அன்புடை நெஞ்சம் கலந்ததென்ன.
விளக்கம்:
நீர் மண்ணோடு கலந்து பிரிக்க முடியாதது போல எப்படி ஆகின்றதோ அப்படி நம் நெஞ்சங்கள் சேர்ந்துவிட்டது எப்படி??
நம்மூர் பாஷைல:
தண்ணி எப்படி மண்ணுல கலந்து பிரிக்க முடியாம இருக்குமோ அப்படி நம்ம ஹார்ட் ரெண்டும் சேந்தது எப்படி கண்ணு??

11 comments:

  1. Vairamuthu roxxxxxxxxx and so do u :)

    ReplyDelete
  2. Write about kannadasan too.. am sure one blog is not enuf!!! :)

    ReplyDelete
  3. பட்டாசு பங்காளி..!! பட்டைய கெளப்புறேள்...!! :):) தமிழ் ஆறா ஓடுது...!! ப்ளாக் எழுத ஆரம்பிச்ச விஷயத்த நம்மளானட சொல்லவே இல்ல பாத்தியா நீ...??!!

    ReplyDelete
    Replies
    1. Naan un kitta evlo vaati sollanum try pannen da.. but edho oru thadangal :) anyways thanks mapla :)

      Delete
  4. Half of the lyrics suttufied from Kurunthogai actually!! This song doesn't exemplify his poetic excellence!! :)

    ReplyDelete
    Replies
    1. This 2nd Pallavi mattum thaan frm kurunthogai i suppose.. is that so??

      Delete
  5. நண்பரே, பசலை என்பது சிலிர்ப்பு என்று பொருள் கூறியிருக்கின்றீர்கள். பசலை என்பது ஒரு வகை நோய். சரியாக சொல்ல வேண்டுமானால், இளைத்து நிறம் மாறும் நோய். தலைவனை பிரிந்து வாடும் தலைவி பசலை நோய் கொண்டதாய் ஐங்குறுநூறு - பாடல் 107ல் கூறப்பட்டுள்ளது. மற்றவை யாவும், சிறந்த முயற்சிகள்.

    இணைப்பு :- http://www.tamilvu.org/courses/degree/p104/p1044/html/p1044413.htm

    தமிழ்ப்பணி சிறக்க வாழ்த்துக்கள்
    --
    உதயவாணன்.

    ReplyDelete
  6. thank u paa.. nice explanation

    ReplyDelete
  7. மிக்க நன்று அன்பரே!
    தொடரட்டும் உம்பணி🌹🌹🌹🌹👍👍👍👍👍👍

    ReplyDelete