Saturday 12 May 2012

கவிதை கார்னர் – 9

என் இதயம் ஒரு துரோகி..
எனக்காக துடிப்பதை விட
உனக்காகவே அதிகம் துடிக்கிறது..


---------------


GOOGLE-உம் குழம்பியது
என்னவள் மனதில் நினைப்பது
என்னவென்று நான் கேட்டபோது..


---------------


என்னவள் நீ செய்யும்
சிணுங்கல்களுக்கு நான்
எழுதுவேன் புது அகராதி..


---------------


கோபத்தினால் உன் கண்களாலே
விமானங்களை என் மேல் வீசாதே..
அதை கண்டு என் கண்கள் நொறுங்கியது
TWIN TOWER-ஐ போல..


---------------


உன் கைபேசி என்னை பார்த்து
கிண்டல் செய்கிறது.. நான்
பிடிக்க நினைக்கும் உன் கையில்
அது தவழும்
ஆணவம் அதற்க்கு..




- Poet’u Dhileepaa 8-)

கவிதை கார்னர் – 8


பெர்முடா முக்கோணத்தில் தொலைந்த
வானூர்தியை போல நானும்
தொலைந்து போனேன்..
உன்னிடத்தில்..


—————


அரை நொடி நான் கண் மூடினாலும்
அதில் தெரிவது உன்
முகம் தான்.. எனக்கு
நீ தானடி SCREENSAVER..


—————


நீ என் இதயத்தில் குடியேறியதனால்
என் இதயத்திற்கும் கிடைத்தது
குளிர்சாதன வசதி..


—————


உன் புன்னகையால் பேசுகிறாய் நீ..
அதை மொழிபெயர்க்க முடியாமல்
தவிக்கிறேன் நான்..


—————


இந்த உலகத்தை போன்ற அழகான
அவள் முகத்தை பாதுகாக்க
அவளே போட்ட OZONE படலம்.. 
என்னவளின் MAKE UP..



- Poet’u Dhileepaa 8-)







கவிதை கார்னர் – 7

நீ என்ன அவ்வளவு அழகோ??
என்று சொல்லிக்கொண்டு இருந்தேன்.. ஆனால்
உன்னை கண்ட அந்த நொடியில் நிமிர்ந்தது
நான் மட்டும் அல்ல.. அந்த
கேள்விக்குறியும் தான்..
ஒரு ஆச்சிரியக்குரியாக..

—————

ஜீரோ வாட் பல்பை போல
DIM-ஆக இருந்த என் இதயம்
உன்னை கண்டதும் ஒளி வீசியதடி
ஒரு FLOOD LIGHT- போல..

—————

உன் கண்களை நான் பார்க்கும் போதெல்லாம்
என் கண்களுக்குள் மின்னல் பாய்கிறதடி..
பெண்ணே கொஞ்சம் இரக்கம் கொள்..
என் இதயத்தை சற்று அணைத்துக்கொள்..

—————

என் இதயத்திற்கு நீ தானடி IP ADDRESS..
ஆயினும் உன் மனதிலிருந்து
ஏன் என்னை செய்தாய்
SHIFT + DELETE??

—————

சாக்லேட் குடும்பம் ஈன்றெடுத்த
திகட்டாத இரட்டையர்கள் தான்
DAIRY MILK SHOTS..


- Poet’u Dhileepaa 8-)



கவிதை கார்னர் – 6


என் கண் முன்னே உன்
நாட்டிய அரங்கேற்றம்..
இன்னும் ஒரு முறை
சோம்பல் முறிப்பாயாக..

—————

உனக்கான என் அன்பு உனக்கு புரியாமலே போனது
அந்த டாக்டர்களின் கையெழுத்தை போல.. என்றாவது
அது உனக்கு தெளிவாக தெரியும்
கரும்பலகையில் வைத்த வெள்ளை புள்ளி போல..

—————

உன் கண்களாலே அடித்தாயே
ஒரு HELICOPTER SHOT..
பறந்தது பந்தல்ல..
என் மனது..

—————

உன்னாலே எரிந்து சாம்பலான
என் இதயம் மறுபடி பிறந்து
உன்னிடமே பறந்து வருகிறது.. ஒரு
PHEONIX பறவையை போல..

—————

நீ என்னை விட்டு பிரிந்து சென்ற
அந்த நொடியில் இறந்தது
என் இதயம்.. அரை கம்பத்தில் பறந்தது
நம் காதல் கொடி..



- Poet’u Dhileepaa 8-)

Saturday 5 May 2012

வழக்கு எண் : 18/9 !!



பல படங்கள் வருது.. அதுல சில படங்கள் ஹிட் ஆகுது.. சில படங்கள் அடையாளமே தெரியாம போகுது.. ரொம்ப சில படங்கள் தான் தரமான படம்-னு பேரு வாங்குது.. அந்த மாறி ரொம்ப நாளுக்கு அப்பறம் வந்த ஒரு தரமான படம் தான் வழக்கு எண் 18/9..

இது ஒரு படம் அப்படின்றத தாண்டி இது ஒரு அனுபவம்.. நம்ப நியூஸ்பேப்பர்- அடிக்கடி பாத்து கண்டுக்காம விட்டு போன துண்டு செய்திகள்-  ஒண்ணு தான் இந்த படம்.. சமுதாயத்துல நடக்கறத வெளிச்சம் போட்டு காட்டி இருக்காரு பாலாஜி சக்திவேல்.. இந்த படத்தோட முழு வெற்றியும்  அவரோடது தான்..

ஏற்கனவே காதல் படம் மூலமா நம்ம மனச கனக்க வச்ச அவரு, இந்த படம் மூலமா நம்ம இதயத்துல இதமா ஒரு பூகம்பத்த வர வச்சி இருக்காரு.. 'என்னது?? இது இவங்க முதல் படமா??' அப்படின்னு கேக்கற அளவுக்கு இந்த படத்துல நடிச்சவங்க எல்லாரும் செம்மையா நடிச்சி இருக்காங்க..
ஜோதி-னு ஒரு பொண்ணு மூஞ்சில யாரோ ஆசிட் ஊத்திடுறாங்க.. ஹாஸ்பிட்டல்ல அவள சேக்கறாங்க.. போலீஸ் விசாரணைய தொடங்குது.. யாரு குற்றவாளி?? எதுக்கு பண்ணாங்க?? அவங்களுக்கு தண்டனை கெடச்சுதா?? இதான் படத்தோட கதை.. வேலு, ஜோதி மற்றும் தினேஷ், ஆர்த்தி இவங்கள சுத்தி பூக்குது திரைக்கதை..

படத்தின் முதல் பாதி- கொஞ்சம் மெதுவாவே ஊர்ந்து போகும் இந்த படம் ரெண்டாவது பாதி கொஞ்சநேரம் வரைக்கும் அப்படி தான் போகுது.. அதுக்கு அப்பறம் நம்மள முழுசா இந்த படம் அபகரிச்சிக்கும்..

இந்த படத்துக்காக ரொம்ப கஷ்ட பட்டு உழைச்சி இருக்காங்க-னு ரொம்ப தெளிவா தெரியுது.. ஆர்த்தி கதாபாத்திரத்துல வர மனிஷா அழகா நடிப்ப வெளிப்படுத்தி இருக்காங்க.. பணக்கார வீட்டு பொறுக்கியா வர்ற தினேஷ்(மிதுன்) சின்ன சின்ன முகபாவங்கள்- நம்ம கவர்கிறார்.. வேலு(ஸ்ரீ) அப்பறம் அவனோட நண்பனா வர சின்ன பையன் துளி கூட பிசகாம வாழ்ந்து இருக்காங்க.. ஜோதியா நடிச்ச ஊர்மிளா(புனே பிலிம் இன்ஸ்ட்டியூட் மாணவி) பார்வைலையே பல வசனம் பேசி இருக்காங்க.. அப்பறம் இன்ஸ்பெக்டர்- நடிச்சவரு, ரோசி அக்கா, இட்லி கட வச்சிருக்கவரு, ஜோதியோட அம்மா, ஆர்த்தியோட அம்மா அப்பா எல்லாருமே சிறந்த நடிப்ப வெளிப்படுத்தி இருக்காங்க..

படம் முடியும் போது சொல்ல முடியாத ஒரு சோகம் நம்ம நெஞ்ச பொளந்து நம்ம கண்கல ஈரமாக்கும்..

பல விருதுகளையும் பாராட்டுகளையும் குவிக்க போகும் இந்த படம் வசூல்- சாதன படைக்குமா-னா அது கேள்விக்குறி தான்.. ஓடாத தரமான படம் நெறைய வந்து இருக்கு.. அந்த வரிசை- இந்த படமும் ஒண்ணு..

வழக்கு எண் 18/9 - தமிழ் சினிமாவின் ஒரு மைல் கல்..

Friday 4 May 2012

கவிதை கார்னர் – 5


உன் புகைப்படம் ஒன்று கிடைக்குமா??
அந்த அன்னத்தின் ஆணவத்தை
அடக்கி விடுகிறேன்..

—————

என்னை கண்டும் காணாமல் நீ
செல்லும் போது சிக்கித்தவிக்கிறது
என் மனது.. அந்த
இடியாப்பத்தை போல..

—————

பொறாமையில் பொங்கி பொலிவு
மெல்ல மங்கி ஆயுள் தண்டனையை
அனுபவிக்கிறது.. நீ
முகம் பார்க்கும் உன்
வீட்டு கண்ணாடி..

—————

உன்னை பார்க்கவே கூடுதல் பிரகாசத்துடன்
தோன்றிய சூரியனை ஒரு
குடை பிடித்து ஏமாற்றி விடாதே..
சூரியன் அழுத சரித்திரம்
உண்டாகி விட போகிறது..

—————

PICASSO ஓவியத்திற்கு உயிர் ஊட்டி
பெயர் சூட்டி உலவ
விட்டிருக்கிறார்கள்.. என்னவள் போகும்
MORNING WALK..


- Poet’u Dhileepaa 8-)

Thursday 3 May 2012

கவிதை கார்னர் – 4


ஒளி பொங்கும் உன் விழியில்
ஏன் இத்தனை சோகம்?? உன்
கண்கள் என்ன தமிழகமா??
ஏன் அடிக்கடி மின்வெட்டு??

—————

ரோஜா இதழை என்றும்
முத்தம் இட்டு விடாதே.. தன்னை
விட மென்மை என்று
தற்கொலை செய்து கொள்ளும்..

—————

என்னிடம் கோபப்பட்டு என் மனதை
எரிய விடாதே.. அதனுள்
நீ இருக்கிறாய்.. ஆனால்
EMERGENCY EXIT இல்லை..

—————

உன்னை அழைத்து சென்றேன் என்
இரு சக்கர வாகனத்தில்.. அன்று
முதல் என் வண்டியும் உன்னை காதலிக்கிறது..
PULSAR – DEFINITELY MALE..

—————

நீ சூடிய மல்லிகை சரத்திலிருந்து
ஒரு பூ கீழே விழுந்தது.. கீழே விழுந்தது
அது செய்த பாவமா??
இல்லை உன் கூந்தலில் இதுவரை இடம் கிடைத்தது
அது செய்த புண்ணியமா?? என்னை
போலவே குழம்பி கிடக்கிறது
அந்த மல்லியும்..


- Poet’u Dhileepaa 8-)