Wednesday 18 July 2012

பில்லா 2 - THU THU THOOO !!



GANG GANG GANGSTER.. HERE COMES THE DISASTER..

BILLA 2 – THE Most Expected movie Shows the TROLL FACE.. 

கதை என்று ஒன்றும் இல்லை.. தலைவன் யுவன் BGM-இல் ஒன்றும் கழட்டவில்லை.. தல அஜித்திற்கு நடிக்க எதுவும் இல்லை.. மொத்தத்தில் இது ஒரு படமே இல்லை..

இந்த படத்த ஏன் டா எடுத்தானுங்க-னு யோசிச்சினு இருந்தேன்.. ஒரு வாரம் ஆச்சு.. இன்னும் பதில் கெடைக்கல.. ஏன் டா ஏன்??

படத்துக்கு COUNTER STRIKE-னு பேரு வச்சி இருக்கலாம்.. சுட்டுனே இருக்கானுங்க.. டேய்.. சுடறவன் எல்லாம் பில்லா-னா போன வாரம் நான் கூட பீச்சுல பலூன் சுட்டேன்.. நானும் பில்லா தான்.. போங்கடா..

இது தமிழ் படமா-னு ஒரு கட்டத்துல சந்தேகம் வந்துடுச்சி.. தமிழ தவற எல்லாமே பேசறானுங்க.. பார்வதி ஓமனகுட்டன்-னு ஒரு பேரழகிய நாயகியா போட்டு இருக்காங்க.. சத்தியமா முடில டா சாமி.. ஒரே கொமட்டிங் AND COMING..

படத்துல ஒரே ஒரு உறுப்படியான காரியம் CINEMATOGRAPHY தான்.. அதுவும் உனக்குள்ளே மிருகம் WAS A CLASS APART (Though it’s a COPY :P)

படத்தோட முதல் பாதி அட்ட COPY FROM THE EPIC SCARFACE.. Sorry Chakri Toleti.. You can Never Ever Recreate the Magnum Opus SCARFACE..

மொத்தத்தில் BILLA 2 – KAAAARRRRII THOOOOOOOOOO..

பாத்துடாதீங்கோஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ !!

Wednesday 11 July 2012

நான் ஈ - கண்டிப்பா SEE !!





என்னடா இது?? டோரா புஜ்ஜி-யே INTERESTING-ஆ இருக்கும் போல?? என்னங்கடா ட்ரைலர் இது?? ஈ வந்து பழி வாங்குதாம்.. செம காமெடி பா.. BUHAHAHAHAHA-னு குபீர் சிரிப்ப வெளிப்படுத்தின எல்லாரும் இந்த படத்த பாத்த ஒடனே இந்த படத்தையா கலாய்சோம் -னு FEEL பண்ணுவீங்க.. 


அப்போ என்னடா-னா ட்ரைலர் பின்னிப்பெடல் எடுத்துச்சி, ஆனா படம் புஸ்வாணமா போய்டுச்சி.. (ஒஸ்தி மாமே..)
இப்போ என்னடா-னா ட்ரைலர் கொமட்டினு வருது, ஆனா படம் டாப் டக்கர்.. 


நான் ஈ.. ட்ரைலர்-லயே படத்தோட  மொத்த கதையையும் சொல்லியாச்சி.. அப்படினா இந்த படத்தோட திரைக்கதை மேல இயக்குனர் எவ்வளவு நம்பிக்க வச்சி இருக்கணும்.. அவரு நம்பிக்க வீண் போகல.. 


மிக மிக வித்யாசமான கதை.. அதான் பா.. ஈ வந்து வில்லன கொல்றது.. 
படம் FULL-ஆ செம INTERESTING.. செம FLOW.. தெய்வ LEVEL GRAPHICS.. 


ட்ரைலர பாத்துட்டு கை கொட்டி சிரிச்சவங்க எல்லாரும் படத்த பாத்துட்டு கை தட்டி பாராட்டுவாங்க.. 


தலைவி சமந்தா 


படத்துல சந்தானத்த வச்சிக்கிட்டே அவர USE பண்ணாம படத்த  நல்லா எடுத்து இருக்கறது FANTASTIC OF THE AWESOMATIC அபூர்வம்..


நான் ஈ - WORTH A WATCH !! :)

Thursday 5 July 2012

Thru’ My EYES – 7



Darkness reigns at the foot of the LIGHTHOUSE !!

Thru’ My EYES – 6



Earth laughs in flowers.

Thru’ My Eyes – 5



கண்பேசும் வார்த்தைகள் புரியவில்லை !!

THRU MY EYES -4



தாம் தரிகிட தீம் தரிகிட தோம் தரிகிட நம் தரிகிட  !!

THRU MY EYES -3



Love Makes Life Beautiful !!

Thursday 21 June 2012

Thru My Eyes - 2



இதயங்களே !! ஜாதி மதம் இனம் நாடு இவைகளை கடந்து வரும் காற்றை போல் காதலையும் சுவாசிப்போம்..

Place : Alleppey !!

அன்பு அன்னை முதற்றே உலகு !!




உன் உள்ளங்கை ரேகையிலே
படுத்துறங்க ஆசை.. நீ
சிந்தும் முத்தத்திலே
மூழ்கி விட ஆசை..

—————

அன்னையை போல பாவமன்னிப்பு எந்த
பாதிரியாரும் தருவது இல்லை..
அன்னையை போல ஞானத்தை
எந்த போதிமரமும் தருவது இல்லை..

—————

இறந்த பிறகு தான் சொர்கத்தை
அடைய முடியுமா??
நான் பல முறை அடைந்து விட்டேனே..
நான் உறங்கும் என்
அன்னை மடி..

—————

உண்மையில் AMRUTANJAN கம்பெனிக்கு
கடுமையான போட்டி தலைவலியில்
என் தலை கோதும் என்
அன்னை விரல்கள் தான்..

—————

யாருடைய முதல் காதலும் தோற்பது இல்லை..
ஆம்.. எல்லோருக்கும்
அவர்களின் அன்னை  தான்
முதல் காதல்..

—————

என் அன்னையால் நான்
கண்ணீர் சிந்திய ஒரே தருணம்,
அவள் வெங்காயம் நறுக்கும் போது தான்..


Tuesday 19 June 2012

Thru My Eyes - 1


My Long time Wish.. One of my Passions. PHOTOGRAPHY..

And the Result is this.. AMATEUR CLICKS..








For Once, Red Eye Correction is not Needed..

Place : Yelagiri..

தாக்க தாக்க தடையற தாக்க..



என்னது?? அருண் விஜய் படமா?? உசுரு மேல ஆச இல்லாதவன் தான் அத பாப்பான்.. அப்படின்னு சொல்லிட்டு படத்த பாக்காம இருந்த பல பேருல நானும் ஒருத்தன்.. அப்பறம் படத்தோட REVIEWS என்ன பாக்க வச்சிடிச்சி.. இந்த படத்த போய் MISS பண்ணிட்டோமே-னு அப்போ தான் FEEL பண்ணேன்..

தடையற தாக்க.. TRAVEL AGENCY வச்சி இருக்க அருண் விஜய், அவரோட காதலி மம்தா, அவங்க அம்மா அப்பா உற்றார் உறவினர், பக்கத்துக்கு ஊட்டுக்காரன் எதிர் ஊட்டுக்காரன் எல்லாரும் இருக்காங்க.. அதே ஏரியா-ல ஒரு ரவுடி.. அவனுக்கு ஒரு தம்பி.. அவங்க CONTROL-ல ஏரியா.. இந்த மாதிரி கதாபாத்திரங்களோட கோடி படம் தமிழ்-ல வந்தாச்சி.. ஆனாலும் இத வச்சிக்கிட்டு டைரக்டர் எப்படி SKETCH போட்டு இருக்காரு.. அதான் மேட்டர்.. படம் பின்னிப்பெடல்..

அந்த ரவுடியும் அவன் தம்பியம் எப்படி ரவுடி ஆனாங்க?? நம்ம ஹீரோக்கும் அவங்களுக்கும் எப்படி சீன் ஆச்சு?? ஹீரோ என்னலா கஷ்ட பட்டாரு?? மம்தா டம்மி பீஸ் OR ரம்மி பீஸ்?? இது எல்லாத்தையும் படம் தெளிவா சொல்லும்.. மிஸ் பண்ணிடாதீங்க.. படம் பத்தி ஏதும் சொல்லல.. ஏன்னா.. இது கேக்க வேண்டிய படம் இல்ல.. பாக்க வேண்டிய படம்..

ரொம்ப விறுவிறுப்பா போகும்.. கடைசி சீன் வரைக்கும் சீட் நுனில உங்கள ஒக்கார வெக்கும்..

இவ்வளவு ACTION-லயும் ரொம்ப இதமா ஒரு காதலும் சொல்லி இருக்காங்க..

இயற்க்கைக்கு அப்பறம் அருண் விஜய்க்கு சொல்லிக்கற மாறி ஒரு படம்..

இந்த படத்த 2012-இன் மௌன குரு-னு சொல்லலாம்..

தடையற தாக்க.. தவறாமல் பார்க்க..

Friday 15 June 2012

கவிதை கார்னர் – 12



என் இதயத்தை குதறி கூறு போடும்
உன் கண்களுக்கு இ.பி.கோ-விலும்
இல்லை ஒரு தண்டனை..

---------------

உன்னை தலையில் ஏற்றுவேன் கிரீடத்தை போல..
தோளில் சுமப்பேன் SHOULDER BAG போல..
மடியில் அமர்த்துவேன் LAPTOP-ஐ போல..
என்றும் எனக்குள்ளே வைத்திருப்பேன் PACEMAKER போல..

---------------

என் கண்களாலேயே உன்
இதயத்தை SCROLL செய்கிறேன்..
எங்காவது ஒரு மூலையில் நான்
தெரிவேனா என்று..

---------------

முத்தம் என்னும் PASSWORD பதித்தே
நுழைந்தாய் என் இதயத்திற்குள்..
மன்னிக்கவும்..
வெளியில் செல்ல ACCESS இல்லை..

---------------

உன் தனிமையிலும் நான்
உன்னை சூழ்ந்து கொண்டிருக்கிறேன்
காற்றை போல..


- Poet’u Dhileepaa  8-)


கவிதை கார்னர் – 11



காய்ச்சலில் கொதிக்கிறது என் உடல்..
மருந்துகள் வேண்டாம்.. என் நெற்றியில்
உன் முத்தம் போதும்..காய்ச்சலும் ஓடிப்போகும்
ஒரே பாய்ச்சலில்..

—————

செலுத்துகிறேன் பேரன்பை..
கிடைக்கவில்லையே சிறு பார்வை..
என் காதல் என்ன
ONE WAY-யா ??

—————

பெண்ணே நான் உன்னை என்
கண்ணில் வைத்தேன்.
அன்று முதல் என் பார்வை
தெளிவடைந்தது.. நீதானடி என்
CONTACT LENS..

—————

கடல் மார்க்கமாக பயணித்து விடாதே..
அந்த வளைகுடாக்களும் வளையாமல்
நிமிர்ந்து விடும் உன்
அழகை கண்டு..

—————

ZIP FILE-ஐ போல சுருக்கி வைத்திருந்த
என் காதலினை என்னவளே நீ
இனிதாய்
EXTRACT செய்து விட்டாய்..

—————

நீ கூந்தலில் சூடிய மல்லிகை தான்
எனக்கு தொங்கும் தோட்டம்.. அதை
கண்டு என் மனதில் எங்கும்
பொங்கும் தோட்டம்..


- Poet’u Dhileepaa  8-)

Tuesday 12 June 2012

காளமேகமும் சிலேடையும் !!


பூநக்கி ஆறுகால்;
புள்இனத்துக்கு ஒன்பதுகால்;
ஆனைக்கு கால் பதினேழ் ஆனதே;
மானே! கேள்!
முண்டகத்தின் மீது முழுநீலம் பூத்ததுண்டு;
கண்டதுண்டு; கேட்டதில்லை காண்..

என்ன புரிந்ததா.....?
சிலேட்டில் எழுது பழகி இருப்பாரோ, இப்படிச் சிலேடையில் அசத்தி இருக்காறே......

கவி காளமேகம்:
-------------------------
காளமேகம் கணக்கில் புலி போல; பல பாடல்கள் கணக்கிலே சிலேடையாக வந்து விழும்..சாம்பிள்..ஒண்ணு..
ஒரு முறை ஒரு பெண் கவி காளமேகப்புலவரிடம் இதுவரை எங்கும் கேட்டிராத ஒரு பாடலைப் பாடுமாறு கேட்டுள்ளார். அதற்கு அவரும் அப்பெண் விழி விரித்து
ஆச்சர்யப்படும் அளவுக்குப் பாடல் ஒன்றைப் பாடியிருக்கின்றார்.

பாடல்:
----------
“பூநக்கி ஆறுகால்; புள்இனத்துக்கு ஒன்பதுகால்;
ஆனைக்கு கால் பதினேழ் ஆனதே; மானே! கேள்!
முண்டகத்தின் மீது முழுநீலம் பூத்ததுண்டு;
கண்டதுண்டு; கேட்டதில்லை காண்! “


விளக்கம்:
---------------
பூநக்கி என்றால் என்ன என்ற கேள்வி அனைவருக்கும் வருவதில் சந்தேகமில்லை. நம் அனைவருக்கும் தெரிந்தது பூனை.


புலவர் பூனையைக் குறிப்பிடுகிறார் என்றால் அதற்கு நான்கு கால் தானே என்று யூகிக்கத் தோன்றும்.

இங்கு தான் புலவர் தன் சொல் நயத்தை மேன்மையாகக் கையாண்டுள்ளார்.
இங்கு பூநக்கி என்பது பூவை நக்கித் தேனை உறிஞ்சும்
தேனீ . அதாவது தேனீக்களுக்கு ஆறுகால் என்பதை அவ்வாறு கூறியிருக்கிறார்.

புள்இனம் என்றால் பறவையினங்கள். அது சரி பறவைகளுக்கு எப்படி ஒன்பது கால்.
இங்கும் புலவர் தன் சொல் விளையாட்டை பயன்படுத்தியுள்ளார். அதாவது 9 * 1/4
= 2 1/4. ஒன்பதைக் காலால் பெருக்கினால் இரண்டே கால் வரும். அதாவது பறவை
இனங்களுக்கு இரண்டே கால்கள் என்று அழுத்தமாகக் கூறியுள்ளார்.

இங்குயானையை ஆனை என்று கூறியுள்ளார். மேலே கூறியது போல் 17 * 1/4 = 4 1/4.
பதினேழை காலால் பெருக்கினால் நாலேகால். அதாவது ஆனைக்கு நான்கு கால்கள்
என்று அழுத்தமாகக் கூறியுள்ளார்.

பின்பு அப்பெண்ணைப் பார்த்து, பெண்ணே கேள்(மானே! கேள்!).
முண்டகம் என்பது தாமரை மலர். அதாவது தாமரை மலரின்செம்மை நிறத்தை உடையவர் சிவபெருமான். அதே போல் குவளை மலரின் நீல நிறத்தை
உடையவர் அன்னை உமையாள்.
தாமரை மலரின் செம்மை நிறத்தை உடைய சிவபெருமான் தன்னில் சரிபாதியை குவளை மலரின் நீல நிறத்தை உடைய அன்னை உமையாளுக்குக்
கொடுத்தது தாமரைப்பூவில் குவளை மலரின் நீல நிறம் படிந்துள்ளது
(பூத்ததுண்டு) என்றும். இக்காட்சியைக் காண முடியும் என்றும்,
அதற்க்கான சான்றுகள் ஏட்டிலோ அல்லது நாட்டிலோ கிடையாது என்றும் கூறியுள்ளார்..

கவி காளமேகம் ராக்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் !!

கவிதை கார்னர் – 10



நீ சிரிக்கும் ஓசைக்கு அந்த
ரஹ்மானும் இசை அமைக்க முடியாதடி..
இசைக்கே எப்படி இசை அமைப்பது??

—————

உனக்குள் நுழைய எவ்வளவோ முயல்கிறேன்..
ஆனால் உன் இதயத்திற்கு பக்கத்தில்
ஏன் நீ வைத்திருக்கிறாய்
NO ENTRY போர்டு..

—————

நீ அகங்காரத்தினால் கூறும்
வார்த்தைகள் கூட என்னை
ஆஹா’காரம் செய்ய
வைக்கின்றதே..

—————

நான் என் காதலை மழை போல்
பொழிந்தும் ஏன் நீ மெளனமாக
இருக்கிறாய்.. உன் இதயம் என்ன
MANMOHAN SINGH-ஆ?? ஏன் இந்த
MUTE MODE??

—————

படிக்கின்றேன் காதல் பட்டப்படிப்பு..
பிடித்த பாடம் அவள் விழி ஈர்ப்பியல்..
ஆனால் அவளிடம் காதலை
சொல்லும் VIVA-வில்
எப்போதும் ARREAR !!

—————

என் மனதினில் உன் நினைவுகள்
அள்ள அள்ள வருவதனால் என்
மனமும் ஒரு அக்ஷய பாத்திரமே..
அதை தூய்மையாக்கும் VIM BAR நீயே..


- Poet’u Dhileepaa  8-)

Saturday 12 May 2012

கவிதை கார்னர் – 9

என் இதயம் ஒரு துரோகி..
எனக்காக துடிப்பதை விட
உனக்காகவே அதிகம் துடிக்கிறது..


---------------


GOOGLE-உம் குழம்பியது
என்னவள் மனதில் நினைப்பது
என்னவென்று நான் கேட்டபோது..


---------------


என்னவள் நீ செய்யும்
சிணுங்கல்களுக்கு நான்
எழுதுவேன் புது அகராதி..


---------------


கோபத்தினால் உன் கண்களாலே
விமானங்களை என் மேல் வீசாதே..
அதை கண்டு என் கண்கள் நொறுங்கியது
TWIN TOWER-ஐ போல..


---------------


உன் கைபேசி என்னை பார்த்து
கிண்டல் செய்கிறது.. நான்
பிடிக்க நினைக்கும் உன் கையில்
அது தவழும்
ஆணவம் அதற்க்கு..




- Poet’u Dhileepaa 8-)

கவிதை கார்னர் – 8


பெர்முடா முக்கோணத்தில் தொலைந்த
வானூர்தியை போல நானும்
தொலைந்து போனேன்..
உன்னிடத்தில்..


—————


அரை நொடி நான் கண் மூடினாலும்
அதில் தெரிவது உன்
முகம் தான்.. எனக்கு
நீ தானடி SCREENSAVER..


—————


நீ என் இதயத்தில் குடியேறியதனால்
என் இதயத்திற்கும் கிடைத்தது
குளிர்சாதன வசதி..


—————


உன் புன்னகையால் பேசுகிறாய் நீ..
அதை மொழிபெயர்க்க முடியாமல்
தவிக்கிறேன் நான்..


—————


இந்த உலகத்தை போன்ற அழகான
அவள் முகத்தை பாதுகாக்க
அவளே போட்ட OZONE படலம்.. 
என்னவளின் MAKE UP..



- Poet’u Dhileepaa 8-)







கவிதை கார்னர் – 7

நீ என்ன அவ்வளவு அழகோ??
என்று சொல்லிக்கொண்டு இருந்தேன்.. ஆனால்
உன்னை கண்ட அந்த நொடியில் நிமிர்ந்தது
நான் மட்டும் அல்ல.. அந்த
கேள்விக்குறியும் தான்..
ஒரு ஆச்சிரியக்குரியாக..

—————

ஜீரோ வாட் பல்பை போல
DIM-ஆக இருந்த என் இதயம்
உன்னை கண்டதும் ஒளி வீசியதடி
ஒரு FLOOD LIGHT- போல..

—————

உன் கண்களை நான் பார்க்கும் போதெல்லாம்
என் கண்களுக்குள் மின்னல் பாய்கிறதடி..
பெண்ணே கொஞ்சம் இரக்கம் கொள்..
என் இதயத்தை சற்று அணைத்துக்கொள்..

—————

என் இதயத்திற்கு நீ தானடி IP ADDRESS..
ஆயினும் உன் மனதிலிருந்து
ஏன் என்னை செய்தாய்
SHIFT + DELETE??

—————

சாக்லேட் குடும்பம் ஈன்றெடுத்த
திகட்டாத இரட்டையர்கள் தான்
DAIRY MILK SHOTS..


- Poet’u Dhileepaa 8-)