காய்ச்சலில் கொதிக்கிறது என் உடல்..
மருந்துகள் வேண்டாம்.. என் நெற்றியில்
உன் முத்தம் போதும்..காய்ச்சலும் ஓடிப்போகும்
ஒரே பாய்ச்சலில்..
—————
செலுத்துகிறேன் பேரன்பை..
கிடைக்கவில்லையே சிறு பார்வை..
என் காதல் என்ன
ONE WAY-யா ??
—————
பெண்ணே நான் உன்னை என்
கண்ணில் வைத்தேன்.
அன்று முதல் என் பார்வை
தெளிவடைந்தது.. நீதானடி என்
CONTACT LENS..
—————
கடல் மார்க்கமாக பயணித்து விடாதே..
அந்த வளைகுடாக்களும் வளையாமல்
நிமிர்ந்து விடும் உன்
அழகை கண்டு..
—————
ZIP FILE-ஐ போல சுருக்கி வைத்திருந்த
என் காதலினை என்னவளே நீ
இனிதாய்
EXTRACT செய்து விட்டாய்..
—————
நீ கூந்தலில் சூடிய மல்லிகை தான்
எனக்கு தொங்கும் தோட்டம்.. அதை
கண்டு என் மனதில் எங்கும்
பொங்கும் தோட்டம்..
- Poet’u Dhileepaa 
No comments:
Post a Comment