Tuesday 19 June 2012

தாக்க தாக்க தடையற தாக்க..



என்னது?? அருண் விஜய் படமா?? உசுரு மேல ஆச இல்லாதவன் தான் அத பாப்பான்.. அப்படின்னு சொல்லிட்டு படத்த பாக்காம இருந்த பல பேருல நானும் ஒருத்தன்.. அப்பறம் படத்தோட REVIEWS என்ன பாக்க வச்சிடிச்சி.. இந்த படத்த போய் MISS பண்ணிட்டோமே-னு அப்போ தான் FEEL பண்ணேன்..

தடையற தாக்க.. TRAVEL AGENCY வச்சி இருக்க அருண் விஜய், அவரோட காதலி மம்தா, அவங்க அம்மா அப்பா உற்றார் உறவினர், பக்கத்துக்கு ஊட்டுக்காரன் எதிர் ஊட்டுக்காரன் எல்லாரும் இருக்காங்க.. அதே ஏரியா-ல ஒரு ரவுடி.. அவனுக்கு ஒரு தம்பி.. அவங்க CONTROL-ல ஏரியா.. இந்த மாதிரி கதாபாத்திரங்களோட கோடி படம் தமிழ்-ல வந்தாச்சி.. ஆனாலும் இத வச்சிக்கிட்டு டைரக்டர் எப்படி SKETCH போட்டு இருக்காரு.. அதான் மேட்டர்.. படம் பின்னிப்பெடல்..

அந்த ரவுடியும் அவன் தம்பியம் எப்படி ரவுடி ஆனாங்க?? நம்ம ஹீரோக்கும் அவங்களுக்கும் எப்படி சீன் ஆச்சு?? ஹீரோ என்னலா கஷ்ட பட்டாரு?? மம்தா டம்மி பீஸ் OR ரம்மி பீஸ்?? இது எல்லாத்தையும் படம் தெளிவா சொல்லும்.. மிஸ் பண்ணிடாதீங்க.. படம் பத்தி ஏதும் சொல்லல.. ஏன்னா.. இது கேக்க வேண்டிய படம் இல்ல.. பாக்க வேண்டிய படம்..

ரொம்ப விறுவிறுப்பா போகும்.. கடைசி சீன் வரைக்கும் சீட் நுனில உங்கள ஒக்கார வெக்கும்..

இவ்வளவு ACTION-லயும் ரொம்ப இதமா ஒரு காதலும் சொல்லி இருக்காங்க..

இயற்க்கைக்கு அப்பறம் அருண் விஜய்க்கு சொல்லிக்கற மாறி ஒரு படம்..

இந்த படத்த 2012-இன் மௌன குரு-னு சொல்லலாம்..

தடையற தாக்க.. தவறாமல் பார்க்க..

No comments:

Post a Comment