Tuesday 12 June 2012

காளமேகமும் சிலேடையும் !!


பூநக்கி ஆறுகால்;
புள்இனத்துக்கு ஒன்பதுகால்;
ஆனைக்கு கால் பதினேழ் ஆனதே;
மானே! கேள்!
முண்டகத்தின் மீது முழுநீலம் பூத்ததுண்டு;
கண்டதுண்டு; கேட்டதில்லை காண்..

என்ன புரிந்ததா.....?
சிலேட்டில் எழுது பழகி இருப்பாரோ, இப்படிச் சிலேடையில் அசத்தி இருக்காறே......

கவி காளமேகம்:
-------------------------
காளமேகம் கணக்கில் புலி போல; பல பாடல்கள் கணக்கிலே சிலேடையாக வந்து விழும்..சாம்பிள்..ஒண்ணு..
ஒரு முறை ஒரு பெண் கவி காளமேகப்புலவரிடம் இதுவரை எங்கும் கேட்டிராத ஒரு பாடலைப் பாடுமாறு கேட்டுள்ளார். அதற்கு அவரும் அப்பெண் விழி விரித்து
ஆச்சர்யப்படும் அளவுக்குப் பாடல் ஒன்றைப் பாடியிருக்கின்றார்.

பாடல்:
----------
“பூநக்கி ஆறுகால்; புள்இனத்துக்கு ஒன்பதுகால்;
ஆனைக்கு கால் பதினேழ் ஆனதே; மானே! கேள்!
முண்டகத்தின் மீது முழுநீலம் பூத்ததுண்டு;
கண்டதுண்டு; கேட்டதில்லை காண்! “


விளக்கம்:
---------------
பூநக்கி என்றால் என்ன என்ற கேள்வி அனைவருக்கும் வருவதில் சந்தேகமில்லை. நம் அனைவருக்கும் தெரிந்தது பூனை.


புலவர் பூனையைக் குறிப்பிடுகிறார் என்றால் அதற்கு நான்கு கால் தானே என்று யூகிக்கத் தோன்றும்.

இங்கு தான் புலவர் தன் சொல் நயத்தை மேன்மையாகக் கையாண்டுள்ளார்.
இங்கு பூநக்கி என்பது பூவை நக்கித் தேனை உறிஞ்சும்
தேனீ . அதாவது தேனீக்களுக்கு ஆறுகால் என்பதை அவ்வாறு கூறியிருக்கிறார்.

புள்இனம் என்றால் பறவையினங்கள். அது சரி பறவைகளுக்கு எப்படி ஒன்பது கால்.
இங்கும் புலவர் தன் சொல் விளையாட்டை பயன்படுத்தியுள்ளார். அதாவது 9 * 1/4
= 2 1/4. ஒன்பதைக் காலால் பெருக்கினால் இரண்டே கால் வரும். அதாவது பறவை
இனங்களுக்கு இரண்டே கால்கள் என்று அழுத்தமாகக் கூறியுள்ளார்.

இங்குயானையை ஆனை என்று கூறியுள்ளார். மேலே கூறியது போல் 17 * 1/4 = 4 1/4.
பதினேழை காலால் பெருக்கினால் நாலேகால். அதாவது ஆனைக்கு நான்கு கால்கள்
என்று அழுத்தமாகக் கூறியுள்ளார்.

பின்பு அப்பெண்ணைப் பார்த்து, பெண்ணே கேள்(மானே! கேள்!).
முண்டகம் என்பது தாமரை மலர். அதாவது தாமரை மலரின்செம்மை நிறத்தை உடையவர் சிவபெருமான். அதே போல் குவளை மலரின் நீல நிறத்தை
உடையவர் அன்னை உமையாள்.
தாமரை மலரின் செம்மை நிறத்தை உடைய சிவபெருமான் தன்னில் சரிபாதியை குவளை மலரின் நீல நிறத்தை உடைய அன்னை உமையாளுக்குக்
கொடுத்தது தாமரைப்பூவில் குவளை மலரின் நீல நிறம் படிந்துள்ளது
(பூத்ததுண்டு) என்றும். இக்காட்சியைக் காண முடியும் என்றும்,
அதற்க்கான சான்றுகள் ஏட்டிலோ அல்லது நாட்டிலோ கிடையாது என்றும் கூறியுள்ளார்..

கவி காளமேகம் ராக்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் !!

No comments:

Post a Comment